விளையாட்டு

கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு

கோலியின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கிறது: சச்சின் பேச்சு

webteam

இந்திய அணி கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷம்தான் இந்திய அணியின் பலம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"டெமாக்ரசி 11- தி கிரேட் இந்தியன் கிரிக்கெட் ஸ்டோரி" என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இந்த புத்தகத்தை பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசி எழுதியுள்ளார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர் உட்பட சுனில் கவாஸ்கர், அசாருதீன் போன்ற புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சச்சின், 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோலி அறிமுகமானதில் இருந்து இன்று வரை தான் கோலியை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார். கோலியிடம் உள்ள கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், தற்போது அவரின் ஆக்ரோஷமே இந்திய அணிக்கு பெரிதும் பலமாக அமைந்துள்ளது என்றும் சச்சின் தெரிவித்தார். 

இந்தியா - நியூசிலாந்து அணி இடையிலான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி சதமடித்துள்ளார். இது கோலியின் 31 வது சர்வதேச ஒருநாள் சதம் ஆகும். இதன்மூலம் கோலி ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்து 2-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.