விளையாட்டு

பங்களாதேஷ்க்கு எதிரான டி20: கோலிக்கு ஓய்வு

பங்களாதேஷ்க்கு எதிரான டி20: கோலிக்கு ஓய்வு

jagadeesh

பங்களாதேஷ் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 தொடரில் இருந்து கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் கோலிக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதல் முறையாக டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நவம்பர் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவம்பர் 2-ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டி டெல்லியிலும், முறையே நவம்பர் 7 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறும் போட்டிகள் ராஜ்கோட் மற்றும் நாக்பூரில் நடைபெற உள்ளன. எனவே, இந்தத் தொடருக்கான அணிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட், வாஷிங்டன் சுந்தர், குர்ணால் பாண்ட்யா, சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாக்குர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.