விளையாட்டு

கோலி பிடிச்ச பேட்ஸ்மேன்தான், ஆனா..! பாக். வேகம் ஆமிர் பேட்டி!

கோலி பிடிச்ச பேட்ஸ்மேன்தான், ஆனா..! பாக். வேகம் ஆமிர் பேட்டி!

webteam

’இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி எனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்தான். ஆனால் களத்தில் இறங்கிவிட்டால் அவர் விக்கெட்டை வீழ்த்துவதுதான் என் நோக்கமாக இருக்கும்’ என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆமீர் கூறினார்.

இது தொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘பிடித்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்கிறார்கள். நான் பலமுறை சொல்லிவிட்டேன். சமீப காலமாக எனக்குப் பிடித்த பேட்ஸ்மேன் விராத் கோலிதான் என்று. அவர் சிறந்த வீரர். என்னதான் அழுத்தம் இருந்தாலும் அவர் சிறப்பாக ஆடக்கூடியவர். 19 வயது பிரிவினருக்கான போட்டியில் அவர் இந்திய டீமுக்கு கேப்டனாக இருந்தவர். அப்போது நான் பாகிஸ்தான் அணியில் இருந்தேன். எங்கள் பழக்கம் அப்போதிருந்தே தொடர்கிறது. இருந்தாலும் விளையாட்டு என்று வந்துவிட்டால், அவர் விக்கெட்டை வீழ்த்துவதுதான் என் நோக்கமாக இருக்கும். சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது அவர் எனக்கு நான் கேட்காமலேயே பேட் பரிசளித்தார். அதை என்னால் மறக்க முடியாது’ என்றார் முகமது ஆமிர்.