விளையாட்டு

தோனியிடம் கேப்டன்ஷிப் பாடம் கற்கும் கோலி

தோனியிடம் கேப்டன்ஷிப் பாடம் கற்கும் கோலி

webteam

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நீண்ட அனுபவம் கொண்ட தோனியின் ஆலோசனையை ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும் கேட்டுவருவதாக இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. கேப்டனாக முதல் டி20 தொடரை விராத் கோலி வென்றுள்ளார். வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கேப்டன் கோலி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக நீண்ட அனுபவம் கொண்ட தோனியின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியின் ஸ்டார் பவுலரான சஹாலுக்கு 4 ஓவர்கள் முடிந்த பிறகு ஹர்திக் பாண்ட்யாவை பந்துவீச அழைக்க தான் எண்ணியதாகவும், ஆனால், பும்ராவை பந்துவீச அழைக்கலாம் என்று தோனி மற்றும் நெஹ்ரா ஆலோசனை கூறியதாக கோலி தெரிவித்துள்ளார். இதனால் பும்ரா பந்துவீச அழைத்ததாகவும், அவர் வீசிய முதல் 4 பந்துகளில் கடைசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை முடித்து வைத்தார் என்று கோலி கூறியுள்ளார்.