விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலிக்கு எந்த இடம்?

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: கோலிக்கு எந்த இடம்?

jagadeesh

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 4-வது இடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் இருக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 862 புள்ளிகளுடன் விராட் கோலி 4-ஆம் இடத்தில் உள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே ஒரு இடம் முன்னேறி 8-ஆம் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 919- புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2 வது மற்றும் 3 ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித், லபுசேன் ஆகியோர் உள்ளனர். இந்திய அணி வீரர் புஜாரா 6-ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொருத்தவரை பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் அஷ்வின் 8 ஆம் இடம் மற்றும் பும்ரா 9ஆம் இடத்தில் உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 419- புள்ளிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளார்.