2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான பிசிசிஐ விருதுக்கு, இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாலி உம்ரிகர் பெயரில், வழங்கப்படும் இவ்விருதை விராட் கோலி ஏற்கனவே 2012, 2015 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார். இப்போது மூன்றாவது முறையாகப் பெறுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதற்காகச் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு, திலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட உள்ளது.