விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள்: லோகேஷ் ராகுல் சாதனை

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள்: லோகேஷ் ராகுல் சாதனை

webteam

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்து லோகேஷ் ராகுல் சாதனை பட்டியலில் இடம் பிடித்தார்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 அரைசதங்கள் அடித்த இந்தியாவைச் சேர்ந்த முதல் வீரர் என்ற சாதனையை லோகேஷ் ராகுல் படைத்தார். 

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட்டில் இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். மேலும், தொடர்ச்சியாக ஏழு அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிறிஸ் ரோஜர்ஸ், இலங்கையின் சங்ககரா, வெஸ்ட் இண்டீஸின் சந்தர்பால் உள்ளிட்ட 5 வீரர்களுடன் இந்த சாதனைப்பட்டியலில் ராகுல் இணைந்தார்.