கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 143 ரன் என்ற இலக்கை நிர்ணைத்துள்ளது ராஜஸ்தான் அணி.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 49வது லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவிற்குப் பதிலாக ஷிவம் மவி சேர்க்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் அணியில் இஷ் சோதி, அனுரீத் சிங் மற்றும் ராகுல் திரிபதி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரராக ராகுல் திரிபதி மற்றும் பட்லர் இருவரும் களம் இறங்கினர். தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
அணியின் ஸ்கோர் 63 ரன்கள் எடுத்து இருந்த போது திரிபதி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனையெடுத்து களம் கண்ட கேப்டன் ரஹானே 11 ரன்களில் வெளியேறினார். கடந்த சில போட்டியில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற பட்லர் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்து வீச்சில் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் ரன் ரேட் மளமளவென குறைந்தது. இறுதியில் ராஜஸ்தான் அணி 19 ஒவரிலே அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனையெடுத்து 143 ரன்கள் என்ற இலக்குடன் களம் கண்ட கொல்கத்தா அணி 2.2 ஒவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.