விளையாட்டு

ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி - ஐதராபாத்துடன் மோதுகிறது

ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா அணி - ஐதராபாத்துடன் மோதுகிறது

webteam

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தானை வீழ்த்தி 2வது குவாலிபையருக்கு கொல்கத்தா அணி முன்னேறியது.


கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அதன்படி முதலில் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 38 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு சிக்சர்களும், 4 பவுண்டர்களும் அடங்கும். கடைசியில் அதிரடியாக விளையாடிய ரசூல் 25 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதில் 5 சிக்சர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும்.

அடுத்ததாக, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஒவரில் 4 விக்கெட் இழந்து 144 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக சாம்சன் 50 ரன்கள் சேர்த்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.