விளையாட்டு

RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். அதனால் கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகிறது. 

பெங்களூரு அணி இந்த சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மறுபக்கம் கொல்கத்தா அணி இரண்டிலும் தோல்வியை தழுவியுள்ளது. பெங்களூரு அணி எந்த மாற்றங்களையும் செய்யாமல் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கொல்கத்தா அணியில் மாற்றங்களை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. 

இன்று நடைபெறுகின்ற மற்றொரு போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடுகின்றன.