விளையாட்டு

ஐபிஎல் போட்டி: கோலியுடன் கைகோர்க்கிறார் கிறிஸ்டன்!

ஐபிஎல் போட்டி: கோலியுடன் கைகோர்க்கிறார் கிறிஸ்டன்!

webteam

ஐபிஎல் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட இருக்கிறார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், கேரி கிறிஸ்டன். இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்த போதுதான், இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பைய வென்றது. பின்னர் ஐபிஎல்-ல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த அவர் அதிலிருந்து விலகினார். இந்நிலையில் விராத் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு அவர் பயிற்சியாளர் ஆக இருக்கிறார். 

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலம், அடுத்த ஆண்டு ஜனவரி 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியின் தங்கள் அணியின் 5 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். மற்ற வீரர்கள் ஏலத்திற்கு வருகிறார்கள். ஏலத்தில் வீரர்களை எடுக்க ஒவ்வொரு அணியும் ரூ.80 கோடி வரை பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் பெங்களூர் ராயல் சேஞ்சர்ஸ் அணி, விராத் கோலியுடன், டிவில்லியர்ஸ், சேஹல், கிறிஸ் கெய்ல் ஆகியோரை தக்க வைத்துக்கொள்ள இருக்கிறது.