இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை, கபில்தேவ் தலைமையிலான குழு தேர்வு செய்யும் என்று கூறப்படு கிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கு வரும் 30-ஆம் தேதி கடைசி நாள். ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கமிட்டி தான் பயிற்சியாளரை தேர்வு செய்து வாரியத்துக்கு பரிந்துரைக்கும். சச்சின், லட்சுமண் உள்ளிட்டோர் மீது இரட்டை ஆதாய பிரச் னை இருப்பதால், அவர்களுக்கு பதில், மகளிர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்த கபில்தேவ் தலைமையி லான குழுவே இந்த பயிற்சியாளரையும் தேர்வு செய்யும் என்று கூறப்படுகிறது.
இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு பிறகே, எந்த அணி தேர்வு செய்யும் என்பது தெரியவரும்.