மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆன்ஜியோ பிளாஸ்டி சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை சரிசெய்ய உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து கபில்தேவின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர் மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக கையை உயர்த்திக்காட்டி புன்னகைக்கும் புகைப்படம் நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் கபில்தேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கபில் தேவ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் அதுல் மாத்தூருடன் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.