விளையாட்டு

வந்து விட்டார் ஜூனியர் ஹர்திக் பாண்ட்யா - வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

webteam

இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக, அவர் தனது இன்ஸாடாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவும் செர்பியா நாட்டு நடிகை நடாசாவை காதலித்து வந்ததையடுத்து இருவரும் நடுக்கடலில் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடாசா கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸாடாகிராமில் தெரிவித்திருந்த ஹர்திக் பாண்ட்யா விரைவில் எங்கள் உலகத்தில் இன்னொருவர் இணையப் போகிறார் எனக் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் தற்போது தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஹர்திக் பாண்டியா அவரது இன்ஸாடாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில் ”நாங்கள் எங்கள் ஆண் குழந்தையுடன் ஆசீர் வதிக்கப்பட்டிருக்கிறோம் என்று பதிவிட்டு அதில் தனது குழந்தையின் கைவிரலை பிடித்திருப்பது போன்ற புகைப்படத்தையும் அவர் இணைத்துள்ளார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.