தென்னாப்பிரிக்கா வீரர் ஜேபி டுமினி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் டுமினி. 33 வயதான இவர், 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். தொடர்ந்து விளையாடி வந்த இவர், இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 2103 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள டுமினி, ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில போட்டிகளில் டுமினி சரியாக ஆடவில்லை. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தடுமாறினார். இது கேள்விக்குள்ளானது. இதையடுத்து அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.