விளையாட்டு

ஜாஸ் பட்லர் புதிய தோனியா? ஆஸி.பயிற்சியாளரை விளாசிய ரசிகர்கள்!

webteam

இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரை, புதிய தோனி என்று புகழ்ந்த ஆஸ்திரேலிய பயிற்சியாளரை ட்விட்டர்வாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உலகக் கோப்பைத் தொடரில் இன்று நடக்கும் போட்டியில், ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை இன்று எதிர்கொள் கிறது. பரம எதிரிகளான இந்த அணிகள் மோதும் போட்டியில் இன்று பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. இந்நிலையில் ஆஸ்தி ரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லரை பாராட்டினார். அவர் கூறும்போது, ‘’பட்லர் நம்ப முடியாத வீரர். அவர் பேட்டிங் ஆடுவதை பார்க்க எனக்கு பிடிக்கும். அவர் உலக கிரிக்கெட் டில் புதிய தோனியாக இருக்கிறார். ஆனால், இன்றைய போட்டியில் அவர் டக் அவுட் ஆவார் என்று நம்புகிறேன். அவர் சிறந்த அத்லெட், நம்பமுடியாத ஃபினிஷிர்’’ என்றார்.

இதற்கு ட்விட்டர்வாசிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிலர், இந்த ஒப்பீடே தவறானது என்றும் தோனி, அனுபவ த்திலும் திறமையிலும் சாதனையிலும் முன்னணியில் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர், ஜஸ்டின் லாங்கர் பயங்கர கனவில் இருக்கிறார் என்றும் தோனியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ என்றும் கிண்டலடித்துள் ளனர்.

அதே நேரம் அவர் கருத்தை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர். பட்லர், தோனியை விட ஆயிரம் முறை சிறந்தவர் என்று சிலர் கூறியுள்ளனர்.