விளையாட்டு

“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்

“பந்துவீச்சில் கோலியைப் போல் மாறுவார் பும்ரா” முகமது கைஃப்

rajakannan

இந்திய அணியில் பேட்டிங்கில் விராட் கோலியைப் போல் பந்துவீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா திகழ்வார் என முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். 

நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பும்ரா சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஸ்வர் குமார் ஃபார்மில் இல்லாத நேரத்தில் பும்ரா சிறப்பான பங்களிப்பை செலுத்தினார். இதன் மூலம், ஒருநாள் போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து அவர் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 

இந்நிலையில், பும்ரா இந்திய அணியின் சொத்து என்றும் பந்துவீச்சில் இன்னொரு விராட் கோலியாக உருவெடுப்பார் என்றும் முகமது கைஃப் கூறியுள்ளார். “வேகப்பந்துவீச்சில் தற்போது நிறைய வாய்ப்புகள் உள்ளன. பும்ரா சிறப்பாகவே செயல்படுகிறார். பந்துவீச்சில் விராட் கோலியைப் போல் அவர் மாறுவார். சமீபத்தில் தான் அவரை பார்த்தேன். அவரால் அவுட் சிங் பந்தையும் வீச முடிகிறது. அதேபோல், யர்க்கர், இன்சிங், ஸ்லோ பால் என எல்லாவற்றையும் போட முடிகிறது” என்றார் கைஃப்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்தது குறித்து பேசிய கைஃப், “இங்கிலாந்து டெஸ்ட் தொடரை 3-2 என்ற கணக்கில் எளிதில் வென்றிருக்க முடியும். அவர்கள் இளம் அணியாக இருந்தார்கள். நமக்கு நல்ல வாய்ப்பு இருந்தது. நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோம்” என்றார்.