ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், சீனாவின் டியான் ஹூவேயை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், தொடரின் எட்டாம் நிலை வீரரான ஸ்ரீகாந்த், சீனாவின் டியான் ஹூவேயை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போட்டியில், 21-15, 12-21, 21-11 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் போராடி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.