விளையாட்டு

ஆல்ரவுண்டர் தரநிலையில் முதலிடத்தில் ஜடேஜா

ஆல்ரவுண்டர் தரநிலையில் முதலிடத்தில் ஜடேஜா

webteam

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரநிலையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திற்கு முன்னேறினார். 

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த பங்களாதேஷ் வீரர் ஷகீப் அல் ஹசனை ஜடேஜா பின்னுக்குத் தள்ளியுள்ளார். பந்துவீச்சாளர் தரநிலையிலும் ஜடேஜா முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் இருந்த அஷ்வின் மூன்றாவது இடத்திற்கு இறக்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன் தரநிலையில் ஆஸ்திரேலிய அணிக் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்திலும், இங்கிலாந்து அணிக் கேப்டன் ஜோ ரூட் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர். நான்காவது இடத்தில் இருந்த புஜாரா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரநிலையில் விராட் கோலி ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.