விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா - கர்நாடகா மோதல்!

விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா - கர்நாடகா மோதல்!

webteam

விஜய் ஹசாரே கோப்பைக்கான இறுதிப் போட்டியில் சவுராஷ்ட்ரா - கர்நாடகா அணிகள் நாளை மோதுகின்றன.

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 2-வது அரையிறுதியில் சவுராஷ்ட்ரா- ஆந்திரா அணிகள் நேற்று மோதின. 

டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய புஜாரா தலைமையிலான சவுராஷ்ட்ரா அணி 49.1 ஓவர்களில் 255 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஆர்பிட் வசவடா 58 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 56 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய ஆந்திர அணி 45.3 ஓவர்களில் 196 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்ட்ரா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆந்திர அணியில் ரவிதேஜா, சுமந்த் ஆகியோர் தலா 42 ரன்கள் எடுத்தனர். 

இதே மைதானத்தில் நாளை இறுதி போட்டி நடக்கிறது. இதில் சவுராஷ்ட்ரா-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.