விளையாட்டு

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக்ஸ் காலிஸ்க்கு ஐசிசி விருது !

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜாக்ஸ் காலிஸ்க்கு ஐசிசி விருது !

jagadeesh

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் ஐசிசி "ஹால் ஆஃப் பேஃம்" விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களை "ஹால் ஆஃப் பேஃப்" விருது வழங்கி ஐசிசி கவுரவிக்கும். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் ஜாக்ஸ் காலிஸ் இந்தாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்காக 166 டெஸ்ட் போட்டிகளிலும், 328 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள காலிஸ் முறையே 13,289 ரன்களும், 11579 ரன்களும் எடுத்துள்ளார்.

அதேபோல பந்துவீச்சில் டெஸ்ட்டில் 292 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 273 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவர் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்துக்கு எதிராக 1995 ஆம் ஆண்டும், கடைசி டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக 2013 ஆம் ஆண்டும் விளையாடினார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் காலிஸ் மிகச் சிறந்த வீரராக இப்போதும் கருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.