விளையாட்டு

ஜூனியர் உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் மோதல்

ஜூனியர் உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் மோதல்

jagadeesh

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வங்கதேச அணி மோதவுள்ளது.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற நிலையில், 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 45-ஆவது ஒவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2‌15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி முதல் முறைய‌ாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.