விளையாட்டு

100 ஆவது டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா - சிப்லே விக்கெட்டை வீழ்த்தி அசத்தல்

jagadeesh

இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்று வரும் தனது 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தினார் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில்
சென்னையில் நடைபெற்றது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், இரண்டாவதுப் போட்டியில் இந்தியாவும் வென்றது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று 3 ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார். இந்திய அணியில் சிராஜூக்கு பதிலாக பும்ராவும், குல்தீப் யாதவுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 100 ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியாகும்.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லேவை டக் அவுட் ஆக்கினார் இஷாந்த் சர்மா. இதனையடுத்து தன்னுடைய 100 ஆவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார் இஷாந்த் சர்மா. அடுத்து வந்த ஜானி பேரிஸ்டோவை ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற்றினார் அக்ஸர் படேல். இப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.