விளையாட்டு

''இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை'' - தோனியின் பயிற்சி குறித்து பேசிய பதான்.!

''இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை'' - தோனியின் பயிற்சி குறித்து பேசிய பதான்.!

webteam

தோனி கீப்பிங் பயிற்சி மேற்கொண்டது தான் இதுவரை பார்க்காத ஒன்று என முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்

ஐபிஎல் போட்டிகள் இந்தாண்டு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. துபாயில் நடைபெற இருக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் காண்கிறது. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களான சுரேஷ் ரெய்னாவும், ஹர்பஜன் சிங்கும் தொடரில் இருந்து சொந்தக் காரணங்கள் காரணமாக விலகியுள்ளனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரர்கள் இருவர் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பயிற்சியை தொடங்க தாமதமானது. இந்நிலையில் தோனி, ஷேன் வாட்சன், ஜடேஜா, பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியில் பங்கேற்ற தோனி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

அவருடைய ஆச்சரியத்துக்கு காரணம் தோனி கீப்பிங் பயிற்சி மேற்கொண்டது தான். இது குறித்து தெரிவித்துள்ள அவர், தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்ட வீடியோவை பார்த்தேன்.நான் அவருடன் பல வருடங்கள் பணியாற்றி உள்ளேன். இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை. எனக்கு இது புதிது. ஒரு வருடத்திற்கு மேலாக தோனி கிரிக்கெட் விளையாடவில்லை. அந்த காரணத்தினாலும், புது பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு, புது மைதானம் உள்ளிட்ட காரணங்களாலும் தோனி இந்த கீப்பிங் பயிற்சியில் இறங்கியுள்ளதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.