விளையாட்டு

பிரட் லீயை அவுட்டாக்கிய சிறுவர்கள்!

பிரட் லீயை அவுட்டாக்கிய சிறுவர்கள்!

webteam

இந்தியாவில் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மகுடம் சூடப்போகும் அணி எதுவாக இருக்கும் என ரசிகர்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு அடுத்ததாக ப்ரோ கபடி லீக் தொடர் தொடங்கவுள்ளது. இந்தப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை செய்யவுள்ளது. தற்போது அதற்கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது ஸ்டார் நிறுவனம்.

இந்த விளம்பரங்களில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்கள் சிறுவர்களுடன் மல்லுக்கட்டும் ப்ரமோ வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் பிரட் லீ, இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் வீரர் டேரன் சமி ஆகியோர் சிறுவர்களுடன் கபடி விளையாடுகிறார்கள். பிரட் லீயின் பிங்கா பாய்ஸ், இர்பான் பதானின் இர்பான் வாரியர்ஸ், சமியின் சமி ஸ்டிரைக்கர்ஸ் என மூன்று அணிகள் களமிறங்கியுள்ளனர். 

இந்த ப்ரமோ வீடியோவில் பிங்கா பாய்ஸ் மற்றும் இர்பான் வாரியர்ஸ் மோதுகின்றனர். இதில் இர்பான்,  பிங்கா பாய்ஸ் அணியை ஆல் அவுட் செய்கிறார். பின்னர் வரும் பிரட் லீயை, இர்பான் வாரியர்ஸை சேர்ந்த சிறுவர்கள் அலேக்காக தூக்கி அமுக்குகிறார்கள்.   இந்த ப்ரமோ வீடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.