விளையாட்டு

“இதுவும் கூட இனவாதம்தான்; என் கருத்தையும் நிறுத்தப் போவதில்லை”- இர்ஃபான் பதான்

PT

இனவாதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது கருத்தை முன்வைத்துள்ளார். 

உலகிலேயே செல்வ செழிப்பு மிக்க நகரங்களின் ஒன்றான மினியாபொலிஸில் கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர், வெள்ளை காவல் அதிகாரி ஒருவரின் காலால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதற்கு உலகம் முழுவதும் கண்டனங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன. இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கிரிக்கெட் வீரர்கள் பலரும் இனவாதம் குறித்த கருத்துகளையும், தங்களுக்கு நேர்ந்த இனவாத அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இனவாதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது கருத்தை  ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்துள்ளார்.


அதில் கூறும் போது “ இனவாதம் தோலின் நிறத்தை வைத்து சீண்டுவதில் மட்டும் அடங்கி விடுவதில்லை. நீங்கள் வேறு விதமான நம்பிக்கை கொண்டவராக இருக்கும் பட்சத்தில், இந்தச் சமூகத்தில் ஒரு வீடு வாங்குவதற்கு கூட உங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை என்றால் அதுவும் இனவாதத்தில் ஒரு பகுதிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில் “ எனது கருத்துக்களை ஒரு இந்தியராக பதிவு செய்கிறேன். அவை இந்தியாவுக்காக”. நான் நிறுத்தப் போவதில்லை  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.