ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்டியா முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே முதன்மை வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இளம் வீரர்களை கொண்ட இந்த இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடங்குகிறது.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஹர்திக் பாண்டியா முதல் முறையாக இந்திய அணியை கேப்டனாக வழிநடத்த இருப்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகம் உள்ளது. பேட்டிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் காத்திக்கும், பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள். இந்திய அணியில் ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு ஆடும் 11 பேர் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.
அயர்லாந்து அணி ஆண்டி பால்பிர்னி தலைமையில் களமிறங்குகிறது. டாக்ரெல், பால் ஸ்டெர்லிங், கேம்பெர் என அனுபவ வீரர்களும் அணியில் உள்ளனர். தவிர சொந்த மண் என்பதால் அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடாமல் சவால் கொடுக்க முயற்சிக்கும்.
இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:
இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான்
அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி (கேப்டன்), காரெத் டெலானி, ஹாரி டெக்டர், லார்கான் டக்கர் (விக்கெட் கீப்பர்), கர்டிஸ் கேம்பெர், ஆன்டி மெக்பிரைன், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், கிரேக் யங், ஜோஷ் லிட்டில்.
இதையும் படிக்கலாம்: ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!