சென்னை, மும்பை அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் தொடர்பான ஹேஷ்டேக் முடங்கியுள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை அணிகளுக்கு இடையே ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, மும்பை அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி என்றாலே பரபரப்பு இருக்கும். அதுவும் இறுதிப் போட்டி என்றால் எப்படி இருக்கும்.
இரண்டு நாட்களாகவே சென்னை, மும்பை அணிகளின் ரசிகர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களை தெறிக்கவிட்டு வந்தனர். தற்போது போட்டி நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் ட்விட்டரில் இருப்பார்கள். அதனால், ட்விட்டர் பக்கம் முடங்கியுள்ளது. #CSKvsMI, #IPL2019Final, #IPLFinal2019 உள்ளிட்ட ஹேஷ்டேக்கள் முடங்கியுள்ளன. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தே இந்த ஹேஷ்டேக்கள் விட்டுவிட்டு முடங்கி வந்தன.