ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டை சிதைத்துவிட்டது என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர். 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், சர்வதேச போட்டிகளில் மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஆஸ்திரேலியாவில் பிசினஸ் செய்து வருகி றார்.
இப்போது நடக்கும் இந்தியா -வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடருக்காக, வர்ணனையாளராக வந்துள்ளார் ஹூப்பர். அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘16 வருடங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன். நிறைய மாற்றங்கள் நடந்திருக்கிறது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பணம் கொழிக்கும் டி20 லீக் போட்டிகளில் விளையாடுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். வெஸ்ட் இண் டீஸ் கிரிக்கெட்டை, ஐபிஎல் சிதைத்துவிட்டது. சொந்த நாட்டுக்கு விளையாடுவதில் இளம் வீரர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ஐபிஎல் ஒப்பந் தத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இருக்கிறார்கள். ஐபிஎல் தாக்கம் எங்கள் நாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதை வரும் தொடரில் பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கும், வீரர்களுக்கும் இடையே இருந்து வந்த சம்பளப் பிரச்னை தீர்க்கப்பட்டு விட்டது. அந்தப் பிரச்னை காரணமாக, கிறிஸ் கெயில், பிராவோ, பொல்லார்ட், சுனில் நரேன் ஆகியோர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதையே விரும்புகிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விரும்புவதில்லை. டெஸ்ட் போட்டிகளில் அதிகம் விளை யாடினால்தான் முழுமையான கிரிக்கெட் வீரராக மாற முடியும் என்பது என் நம்பிக்கை’ என்று கூறியுள்ளார்.