விளையாட்டு

சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..?

சக வீரர்கள் வெற்றியை கொண்டாடியபோது தோனி என்ன செய்தார் தெரியுமா..?

webteam

தோனி தன் மகளுடன் விளையாடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சாம்பியன் படத்தை மூன்றாவது முறையாக வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதற்கு பலதரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் சென்னை அணி வீரர்கள் கோப்பையுடன் சென்னை வந்துள்ளனர். நிறைவு விழாவில் பேசி முடித்தவுடன், தோனியிடம் வெற்றி பெற்றத்திற்கான கோப்பை வழங்கப்பட்டது. தோனி கோப்பையை கையில் வாங்கியவுடன் சக வீரர்களும், சென்னை அணி பயிற்சியாளர்களும் மேடையை நேக்கி ஓடி வந்தனர். 

ஆனால் கோப்பையை வழக்கம் போல் அணியின் சக வீரர்களிடம் கொடுத்த தோனி, அந்தக் கொண்டாட்டத்தின் இடையே ஓடிய தன் மகளை தேடிச் சென்று தூக்கி கொஞ்சினார். அந்தக் காட்சியை கண்ட அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். அந்தப் புகைப்படம் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.