விளையாட்டு

ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த சீசனில்தான் அதிக சிக்ஸர்கள்!

JustinDurai

ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசனில்தான் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 15வது சீசனில் 10 அணிகள் பங்கு பெறுவதால் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஐபிஎல் வரலாற்றில் இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 885 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2018 ஐபிஎல் தொடரில் 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதன் சாதனையை இந்த வருட ஐபிஎல் முறியடித்து விட்டது. இன்னும் லீக் ஆட்டங்கள் முடிய ஒரு வாரம் மீதமுள்ளது. அதற்குப் பிறகு பிளே-ஆஃப் ஆட்டங்கள் உள்ளன. எனவே முதல்முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு சீசனில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 37 சிக்ஸர்களும், கொல்கத்தா அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸின் ஆன்ட்ரே ரசல் 32 சிக்ஸர்களும், பஞ்சாப் அணிக்காக விளையாடும் இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டன் 29 சிக்ஸர்களும் அடித்துள்ளனர்.

இதையும் படிக்கலாம்: ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி