விளையாட்டு

ஐபிஎல் 2022: பேட்டிங், பவுலிங்கில் சாதிக்கும் வீரர்கள் - எந்த அணி வலுவாக உள்ளது?

ஐபிஎல் 2022: பேட்டிங், பவுலிங்கில் சாதிக்கும் வீரர்கள் - எந்த அணி வலுவாக உள்ளது?

சங்கீதா

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் யார், யார் என்பதை பார்க்கலாம்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் முழுமையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாதநிலையில், 15-வது சீசன் ஐபிஎல் போட்டி இந்தியாவில் பார்வையாளர்கள் அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ம் தேதி முதல் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இதுவரை 20 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த ஆண்டு லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகளவில் எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன. மேலும், இந்தாண்டு ஐபிஎல் போட்டியில், 5 முறை சாம்பியனான மும்பை அணியும், 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியும் இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை சந்தித்து நெட்டிசன்களின் ட்ரோலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

நடப்பாண்டு ஐபிஎல் டி20 போட்டியில் எதிர்பார்த்த வீரர்கள் மற்றும் அணிகள் சொதப்ப, எதிர்பாராத வீரர்கள் மற்றும் அணிகள் தங்களது திறமையை காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்தவகையில், மும்பை மற்றும் சென்னை அணிகள் புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்க, ராஜஸ்தான், கொல்கத்தா, குஜராத் அணிகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

இந்நிலையில், இதுவரை நடந்த 20 போட்டிகளில் எந்தெந்த அணி வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சாதித்து முதல் 5 இடங்களில் உள்ளனர் என்று பார்ப்போம்.

பேட்டிங்கில் அதிக ரன்கள் எடுத்த முதல் 5 வீரர்கள்:

1. ஜோஸ் பட்லர் - 218 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

2. குயிண்டன் டி காக் - 188 (லக்னோ)

3. ஷுப்மன் கில் - 180 (குஜராத் டைட்டன்ஸ்)

4. இஷான் கிஷன் - 175 (மும்பை இந்தியன்ஸ்)

5. ஷிம்ரன் ஹெட்மயர் - 168 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

பவுலிங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 வீரர்கள்:

1. சாஹல் - 11 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

2. உமேஷ் யாதவ் - 10 (கொல்கத்தா)

3. குல்தீப் யாதவ் - 10 (டெல்லி கேப்பிடல்ஸ்)

4. ஹசரங்கா - 8 (பெங்களூரு)

5. ஆவேஷ் கான் - 8 (லக்னோ)

இந்தாண்டு இதுவரை நடந்த போட்டியில், ஒட்டுமொத்த புள்ளிப்பட்டியல், பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் ராஜஸ்தான் அணியே முதலிடம் பிடித்து வலுவான அணியாக உள்ளது.