ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது.
கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில், ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானங்களில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 8 அணிகள் துபாய் சென்றடைந்துள்ளன.
வருகிற 19 ஆம் தேதி முதல் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவருக்கு கொரோனா உறுதியானது. இதனால் போட்டி அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்தநிலையில், இன்று போட்டித் தொடருக்கான அட்டவணை வெளியிடப்படும் என ஐ.பி.எல். நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.