விளையாட்டு

‘மொட்டை மாடியும், 20,000 பந்துகளும்’ லாக்டவுனில் வெறித்தனமாக பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்! 

‘மொட்டை மாடியும், 20,000 பந்துகளும்’ லாக்டவுனில் வெறித்தனமாக பயிற்சி செய்த சஞ்சு சாம்சன்! 

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் ஒன் மேன் ஷோவை தனது அதிரடியான இன்னிங்ஸின் மூலம் காட்டியிருந்தார். 

அதனால், ராஜஸ்தான் அணியும் சென்னை வீழ்த்தி கரை சேர்ந்தது. 

சமூக வலைத்தளம் முழுவதும் சஞ்சுவுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிய அனைவருக்கும் நன்றி சொல்லியவர் இதற்கெல்லாம் காரணம் ஊரடங்கு காலத்தில் தனக்கு பந்து வீசிய ரய்பி கோமஸ் தான் என  தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து அந்த பயிற்சி குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ரய்பி கோமஸ்.

“கொரோனாவினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயிற்சி மேற்கொள்வது சாஞ்சுவுக்கு சிக்கலானது. அதனால் நானும் அவனும் சேர்ந்து எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டோம். 

அதில் பவுன்சர், யார்க்கர் என பந்துவீச்சின் அத்தனை வேரியேஷனிலும் சஞ்சுவை நோக்கி சுமார் இருபதாயிரம் முறைக்கு மேல் பந்து வீசினேன். அதில் நல்ல பந்துகளை தடுத்து ஆடிய சஞ்சு, லூஸ் பால்களை டேமேஜ் செய்துவிட்டார். 

அப்படி ஒவ்வொரு நாளும் 6 முதல் 7 மணி நேரம் வரை பயிற்சி மேற்கொண்டோம். அந்த பயிற்சியும் முயற்சியும் இந்த ஐபிஎல் சீசனில் அவனுக்கு கைகொடுத்துள்ளது என நம்புகிறேன். 

அவனை 12 வயதிலிருந்து பார்த்து வருகிறேன். பிட்னஸ், டயட், பயிற்சி என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வரும் அவன் கோலியை ஆட்டத்தின் மூலம் கவர்ந்து இந்திய அணிக்காக கூடிய சீக்கிரம் விளையாடுவான்” என தெரிவித்துள்ளார் கோமஸ்.