வரும் சனிக்கிழமை அன்று ஆரம்பமாக உள்ள நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடரில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆட உள்ளார்.
அதற்காக துபாயில் போல்ட் பவுலிங் பயிற்சி மேற்கொண்டிருந்த போது ஸ்டெம்புகளை தனது பந்துவீச்சின் மூலம் இரண்டு துண்டுகளாக உடைத்தெறிந்துள்ளார்.
இதனை ‘CLEAN BOULT! Trent has arrived’ என கேப்ஷன் போட்டு ட்விட்டரில் பகிர்ந்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
சராசரியாக மணிக்கு 143.3 கி.மீ வேகத்தில் போல்ட் பந்து வீசக்கூடியவர். ஓட்டத்திற்கு உசைன் போல்ட் என்றால் பந்துவீச்சிற்கு டிரென்ட் போல்ட்.
இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வரும் சனிக்கிழமை அன்று விளையாட உள்ள நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.