துபாயில் நடைபெற்று வரும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை பார்த்து வருகிறார் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
அதை தனது ட்வீட் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“ஹைதராபாத் அணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்த கேப்டன் விராத் 11வது ஓவரில் நவ்தீப் சைனியைக் கொண்டு வந்தார். அது சைனியின் 3வது ஓவரும் கூட. ஆனால் நிதானமாக விளையாடினர் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள். ஆனால் கோலியின் கணிப்புக்கு மாறாக கேட்ச் டிராப் செய்யப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சச்சின் விளையாடியுள்ளார்.