ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெற்றுவரும் 45வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் வார்னர், வில்லியம்சன் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். இதில் வில்லியம்சன் 13 ரன்னில் வெளியேறினர். வார்னருடன் ஜோடி சேர்ந்த மணிஷ் பாண்டே அதிரடியாக விளையாடினார். வார்னர் நிதானமாக விளையாடினார்.
வார்னர் 32 பந்தில் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி வந்த மணிஷ் பாண்டேவும் 36 பந்தில் 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். வார்னர், மணிஷ் ஆட்டமிழந்ததை அடுத்து ஹைதராபாத் அணி சரிவை சந்தித்தது. விஜய் சங்கர்(8), ஷகிப் அல் ஹசன் (9), ஹூடா (0), சாஹா (5), புவனேஷ்வர் குமார் (1) என அடுத்து வந்த யாரும் இரட்டை இலக்கை கூட எட்டாமல் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் ரஷித் கான் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசினார். ஹைதாராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி சார்பில் ஆரோன், தாமஸ், கோபால், உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தது.