2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்காக விளையாடவுள்ளார்.
ஹர்பஜன் சிங் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். சென்னை ரசிகர்களை கவர அவர் தமிழில் ட்விட் செய்து வந்தார். அதிலும் அவர் பயன்படுத்தி தமிழ் வார்த்தைகளால், சென்னை ரசிகர்கள் அவரை வள்ளுவர், கம்பர் என சித்தரித்து மீம்ஸ்களை வெளியிட்டனர். இதைத்தொடர்ந்தும் தமிழ்ப் பண்டிகை காலங்களிலும் வாழ்த்துகள் உட்பட அவ்வப்போது ஹர்பஜன் ட்விட்டரில் தமிழ் வசனங்களை காண முடிந்தது.
இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக ஹர்பஜன் விளையாடுவது உறுதியாகியுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், நடிகர்கள் சிம்பு, அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் வசனம் மற்றும் பாடல் வரிகளை குறிப்பிட்டுள்ளார். அதில், “தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன். சும்மா நெருப்பா, சிறப்பா ஒவ்வொரு மேட்சும் தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து” எனத் தெரிவித்துள்ளார்.