விளையாட்டு

ஹைதராபாத் அணியை வீழ்த்துமா? - டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

ஹைதராபாத் அணியை வீழ்த்துமா? - டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு

webteam

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் இன்று நடைபெறும் 45வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 10 ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் ஹைதராபாத் அணி 6 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 4 போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளனர். இந்த ஐபிஎல் தொடரில் கடந்த மாதம் 30ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றப் போட்டியில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. 

அந்தப் போட்டியில் ராஜஸ்தான் தரப்பில் ரஹானே(70) மற்றும் சஞ்சு சாம்சன்(102) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து. இதனையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி வார்னர்(69), பேரிஸ்டோவ் (45) மற்றும் விஜய் சங்கர்(35) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரிகளில் 201 ரன்கள் குவித்து வெற்றிப் பெற்றது. 

இதனால் அந்தப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இம்முறை ராஜஸ்தான் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்மித் இந்தப் போட்டியில் அசுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் அணியில் பேரிஸ்டோவ் இல்லை. ஹைதராபாத் அணி 10 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. ஆனால் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.