கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 139 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி மற்றும் ராஜஸ்தான் அணி விளையாடிவருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் பட்லர் களமிறங்கினர்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே 5 ரன்களில் பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மித் பட்லருடன் ஜோடி சேர்ந்து சீராக அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 72 ரன்கள் சேர்த்தனர். இதனால் ராஜஸ்தான் அணி 11 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. பட்லர் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடித்து 34 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஹாரி கார்னி பந்துவீச்சில் அவுட் ஆனார்.
அதன்பின்னர் அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ஸ்மித் அரைசதம் கடந்தார். மேலும் 15 ஒவர்கள் ராஜஸ்தான் அணி முடிவில் 103 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 36 ரன்கள் குவித்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்மித் 59 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். இவர் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் ஹாரி கார்னி 2 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு 140 ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 5 ஒவர்கள் விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது. நரேன்(24) மற்றும் லின் (25) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.