விளையாட்டு

தோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாரூக்கான் - வைரலாகும் போட்டோ

தோனி மகளுடன் கொஞ்சி விளையாடிய ஷாரூக்கான் - வைரலாகும் போட்டோ

rajakannan

மகேந்திர சிங் தோனியின் மகள் ஜிவா உடன் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் கொஞ்சி விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சேப்பாக்காம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டிக்கு ஷாரூக்கான் கருப்பு ஆடை அணிந்து வந்திருந்தார். போட்டியின் போது உற்சாகமாக கண்டுகளித்தார். குறிப்பாக ரஸ்ஸல் சிக்ஸர்கள் விளாசிய போது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார். இருப்பினும் கொல்கத்தா அணி சென்னை அணியிடம் தோல்வியடைந்தது. 

இதனிடையே, சென்னை வந்திருந்த ஷாரூக்கான் தோனி மகளுடனும், தினேஷ் கார்த்திக் தாயாருடனும் நேற்றைய பொழுதை கழித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். “நன்றாக விளையாடினீர்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். கார்த்திக் தாயையும், தோனி மகளையும் சந்தித்தேன். இன்றையை நாளில் மூன்றில் இரண்டு பகுதி வெற்றிகரமாக முடிந்தது. அன்பு காட்டிய சிஎஸ்கே ரசிகர்களுக்கு நன்றி” என்று ஷாரூக்கான குறிப்பிட்டிருந்தார். தோனி மகளை ஷாரூக்கான் கொஞ்சும் புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.