விளையாட்டு

‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே

‘சிக்ஸர்கள் என்றால் நாங்கதான்’ பட்டைய கிளப்பிய சிஎஸ்கே

rajakannan

ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. 

பதினோறாவது ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடந்துள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோதின. நாளை நடைபெறும் முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோதவுள்ளது. நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடித்த அணியில் 130 சிக்ஸர்களுடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 68 சிக்ஸர்களுடன் கடைசி இடத்தில் உள்ளது. 

                      அணி                                  சிக்ஸர்கள்

1. சென்னை சூப்பர் கிங்ஸ்                -      130
2. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்       -      115
3. டெல்லி டேர்டெவில்ஸ்               -      115
4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  -      106
5. மும்பை இண்டியன்ஸ்                 -      107
6. கிங்ஸ் லெவன் பஞ்சாப்               -       104
7. ராஜஸ்தான் ராயல்ஸ்                  -       72
8. சன்ரைசர்ஸ் ஐதராபாத்                -       68 

அதேபோல், வீரர்களை பொறுத்தவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரிஷப் பந்த் முதலிடம் பிடித்துள்ளார். அவர் 37 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இருப்பினும் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததால் இதற்கு மேல் அவரால் சிக்ஸர் அடிக்க முடியாது. அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் 5 இடங்களில் சென்னை வீரர்கள் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அம்பதி ராயு 33, தோனி 30 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.