விளையாட்டு

ஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா !

ஒரே வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டிய ப்ரீத்தி ஜிந்தா !

webteam

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருந்தவர் பிரீத்தி ஜிந்தா. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக உள்ளார். அண்மையில் பஞ்சாப் அணி பிளே ஆஃப் வாய்ப்புக்கு முன்னேறாத நிலையில் மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையில் சிக்கியிருந்தார். 

இந்நிலையில் பஞ்சாப் அணி பிளே ஆஃப்க்கு முன்னேறாததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ப்ரீத்தி ஜிந்தா, ரசிகர்களின் கேள்விக்கு ட்விட்டரில் தொடர்ந்து பதில் அளித்து வந்தார். அப்போது  ரசிகர் ஒருவர்,‘விராட் கோலி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்’? என்று எழுப்பிய கேள்விக்கு,  உடனடியாக பதில் அளித்த ஜிந்தா, ‘அவர் ஆவ்ஸம்’என்று ஒற்றை வரியில் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.