சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். பேட்ஸ்மேன்களுக்கான தரநிலையில், இந்திய வீரர் புஜாரா 4ஆவது இடத்தில், கேப்டன் விராட் கோலி ஐந்தாவது இடத்திலும் தொடர்கின்றனர். பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், சதம் விளாசிய ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர், 5 இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தில் உள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில், பங்களாதேஷ் அணியின் ஷகிப் அல் ஹசன் முதலிடம் பிடித்துள்ளார்.