விளையாட்டு

‘ஆரம்பத்தில் கோலியை ஒரு சிறு பிள்ளை என நினைத்தேன்’ - அக்தர்

EllusamyKarthik

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் ‘இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை ஆரம்பத்தில் ஒரு சிறு பிள்ளையாக தான் பார்த்தேன்’ என சொல்லியுள்ளார். 

கிரிக்கெட் பாஸ் என்ற யூடியூப் சேனலில் அக்தர் இதனை தெரிவித்துள்ளார். 

‘2010 - 11இல் விராத் கோலி இந்திய அணியில் விளையாடிய நேரத்தில் அவரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அப்படி தோன்றும். ஆனால் திடீரென அவருக்கு இந்திய அணியின் நிர்வாகத்திடமிருந்து அவருக்கு ஆதரவு கிடைத்தது. அதனை கோலியும் சரியாக உணர்ந்து கொண்டதால் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஆகச்சிறந்த பேட்ஸ்மேனாக உருமாறி நிற்கிறார்’ என சொல்லியுள்ளார். 

அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் புகழ்ந்து பாராட்டியமைக்காக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எதிரியின் பலத்தை நாம் அறிந்து கொள்வது அவசியம் எனவும் அவர் சொல்லியுள்ளார். 

மேலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களான கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஆட்டத்தை என்னவென்று சொல்ல முடியும். பாராட்டுதலை தான் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார் அக்தர்.