விளையாட்டு

இந்திய பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் - 110 இலக்கு

இந்திய பந்துவீச்சில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் - 110 இலக்கு

webteam

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு 110 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த பயணத்தில் ஏற்கெனவே டெஸ்ட் மற்றும்
ஒருநாள் ஆகிய தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் கொல்காத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி, பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. அந்த அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, அந்த அணி இறுதி வரை மீளாமல் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 109 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்துள்ளது. அந்த அணியில் ஆலேன் 27 (20), பவுல் 15 (13), பொலார்ட் 14 (26) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது 110 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது.