விளையாட்டு

ரோகித் டக், ரெய்னா 1ல் அவுட்! இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..

ரோகித் டக், ரெய்னா 1ல் அவுட்! இந்தியா பேட்டிங் ஆரம்பமே சொதப்பல்..

webteam

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இலங்கையில் இந்தியா-இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. தென்னாப்பிரிக்கத் தொடரைக் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ள இந்திய அணியின் வெற்றி இதிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல சமீபத்தில் நடந்த வங்கதேசம் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை, இந்தத் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி இந்திய அணியில் களமிறங்கிய தொடக்க வீரரும், கேப்டனுமான ரோகித் சர்மா 0 ரன்னில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து வந்த ரெய்னாவும் 1 ரன்னில் வெளியேறினார். தற்போது சிக்கர் தவான் (7), மணிஷ் பாண்டே (0) களத்தில் உள்ளனர். இந்திய அணியின் ஸ்கோர், 10-2.