விளையாட்டு

தென்னாப்ரிக்கா அணிக்கு 241 ரன்கள் இலக்கு!

தென்னாப்ரிக்கா அணிக்கு 241 ரன்கள் இலக்கு!

webteam

2வது இன்னிங்க்ஸ் நிறைவில் இந்திய அணி 247 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா 187 ரன்களும், தென்னாப்ரிக்கா 194 ரன்களுக்கு எடுத்தது. இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் 25 ரன்களும், கேப்டன் கோலி 41 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா தடுமாற்றத்தை சந்தித்தது. 

நிலைத்து விளையாடிய ரஹானே மற்றும் புவனேஷ்குமார் இந்திய அணியின் ரன்களை உயர்த்தினர்.  48 ரன்களில் ரஹானே விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமது ஷமி இணைந்து ரன்களை உயர்த்தினர். புவனேஷ்குமார் 33, சமி 27 ரன்களில் வெளியேற, 80.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 247 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் தென்னாப்ரிக்கா இந்தியாவை விட 7 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்ததால், தற்போது அந்த அணி வெற்றி பெற 241 ரன்கள் எடுக்க வேண்டும்.