விளையாட்டு

2-0 என்ற இந்திய வெற்றி 6-0 ஆகும்: அஸ்வின் வாழ்த்து!

2-0 என்ற இந்திய வெற்றி 6-0 ஆகும்: அஸ்வின் வாழ்த்து!

webteam

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 6-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் வாழ்த்து தெரிவித்த்துள்ளார்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது ஒருநாள் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் அம்லா(23) மற்றும் டி காக்(23) ஆகியோர் மட்டும் சற்று நேரம் நிலைத்து ஆடி அவுட் ஆனார்கள். இவர்கள் தவிர ஜெபி டுமினி 25 மற்றும் காயா சோண்டோ 25 ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 32.2 ஓவர்களில் 118 ரன்கள் மட்டும் எடுத்த தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சஹால் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து களமிறங்கியுள்ள இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து வெற்றி நெருங்கி விளையாடி வருகிறது.

இதற்கிடையே இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இந்திய அணி இரண்டு போட்டிகளிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் பயனாக 2-0 என்ற வெற்றி கிடைத்துள்ளது. இந்த வெற்றி 6-0 என்ற கணக்கில் முடிவடையும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் விராட் கோலி, சஹால் மற்றும் குல்தீப் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.