இந்திய அணியின் தொடர் சாதனை:-
2016ம் ஆண்டு முதல் இந்திய அணி 7 ஒருநாள் தொடர்களை அந்நிய மண்ணில் விளையாடியுள்ளது. இதில், இங்கிலாந்தை தவிர்த்து மீதமுள்ள 6 நாடுகளிலும் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இதில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
10 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றுள்ளது. இதற்கு முன்பு தோனி தலைமையிலான இந்திய அணி 2009ம் ஆண்டு 3-1 என்ற கணக்கில் தொடரை வென்று இருந்தது. தற்போது, விராட் கோலி தலைமையிலான அணி 4-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
தொடரின் முக்கிய அம்சங்கள்:-
இந்தத் தொடரில் ஒரு சதம் கூட அடிக்கப்படவில்லை. தனிப்பட்ட வீரர் ஒருபோட்டியில் அடித்த அதிகபட்ச ரன்னே, டெய்லர் அடித்த 93 ரன்தான்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 190 ரன்களுடன் அம்பத்தி ராயுடு முதலிடத்தில் உள்ளார்.
ராயுடு 6 சிக்ஸர்கள், தவான் 23 பவுண்டரிகள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
ரோகித், தவான் தலா இரண்டு அரைசதம் அடித்துள்ளனர்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் பவுல்ட் 12 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
பவுல்ட் எடுத்த 5/21 என்பதே சிறந்த பந்துவீச்சு ஆகும்.
தொடர் நாயகன் விருதினை ஷமி வென்றார்.